எத்தனையோ மருந்து எத்தனையோ மூலிகைகள் தாண்டி தற்போது இறுதியாக உலகம் உணர ஆரம்பித்து இருக்கிறது. ஆக்சிஜன் அளவைக் கூட்ட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. என்று சொல்லுங்கள் ம்ம் ம்ம் ம்ம்… சொல்லும் போது ஆக்சிஜன் அளவு கூடுகிறது என்று.
இதை தானே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவம் தந்தது ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரம், ஓம் நமசிவாய மந்திரம், அது உயிர் மந்திரம்! பிரபஞ்சமே ஓம்கார இசையில் ஓடுகிறதே இன்னுமா மக்களுக்கு
புரியவில்லை…???
ஓம் என்ற ஒரு மந்திரத்தை மட்டும் ஓதி சித்தர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் எவ்வாறு உண்ணாமல்
தவம் செய்தார்கள்…???
ஓம் எனும் மந்திரம் உயிரை உயிரோட்டத்தோடு இணைப்பது. ஆக்சிஜன் அளவு மட்டும் அல்ல உயிரோட்ட சக்தியும் கூடும் ஓம் நமசிவாய எனும் போது. இன்று வாழும் சில மனிதர்களுக்கு தங்கள் உடலில் ஒரு உயிர் இருப்பதையும் கவனிக்க நேரமில்லை. அந்த உயிர் இயங்க சுவாசம் ஓடுகிறதே அதையும் யாருக்கும் கவனிக்க நேரமில்லை.
இதை ஒரு பேரிடரின் பேரிழப்பு வந்து மக்களுக்கு உணர்த்த வேண்டி உள்ளது. ஓம் நமசிவாய ஓம் சரவண பவ
முருகா முருகா முருகா இவை அனைத்தும் ஆக்சிஜன் அளவை கூட்டும் என்று சொன்னால் தான், மக்களும்
இதை உயிர் காக்க ஓதுவார்கள் என காலம் உணர்த்தி இருக்கிறது.
இதில் தமிழின் பெருமை இனி உலகமும் அறியும். ஆம் அம்மா என்ற வார்த்தை கூறுவதற்கு முன் ஆக்சிஜன் அளவைக் குறிப்பெடுங்கள்.
அம்மா. அம்மா… என்று சத்தமாகக் கூறி பயிற்சி செய்து பிறகு ஆக்சிஜன் அளவை சோதித்துப் பாருங்கள் நீங்களே அரண்டு போவீர்கள். அம்மா பால் மட்டும் நமக்குத் தரவில்லை. அம்மா… என்ற வார்த்தை ஆக்சிஜனும் தரும் என இனி வரலாற்றில் எழுதுங்கள்..
தென்னாட்டுடைய சிவன் எல்லையில் எந்நாட்டவர்க்கும் மரண பயம் இருக்காது, இருக்கவும் கூடாது! உயிரோட்டத்தை ஓட்டத் தெரிந்தவருக்கு மருந்து என்ற ஒன்று எதற்கு..???
நம சிவாய மந்திரம் எமனையும் கதி கலங்க வைக்கும் மகா மந்திரம். “நாசியில் வாசியோட்ட வாசியில்
ஓம் இசையூட்ட உய்யும் உயிரும்”. “ஓம் ஓத உயிரும் உயிர் பெறும்”. நம ஓம் நமசிவாய ஓம் முருகா போற்றி
சிவயநம திருச்சிற்றம்பலம்