பல பசுக்கள் அழுததால் தான் நமக்கு திருமூலர் என்னும் சித்தர் கிடைத்தார். மூவாயிரம் தமிழ் என்ற நூலும் கிடைத்தது. பசுவை கொண்டே உயிரை காண முடியும் என்பது சூட்சமம். ஆனால், திருமந்திரத்தில் ஒரு பாடலை மட்டும் வைத்து பொருள் கண்டால், அவ்விளக்கம் உயிரின் அளவு மட்டும் தான் தெரியும். உயிரின் அளவை சொன்னவர் அதை காணும் வழியை சொல்லாமல் விடவில்லை. திருமந்திரத்தை குருவின் அருளால் படிக்கவும்.
சித்தர்களின் பல கலைகள் சிவபெருமானிடம் இருந்து நந்திதேவரால் அருளபட்டது என்பது குறிப்பிடதக்கது. தினமும் வருகிற பிரதோஷ வேளையில் “பூரண பிராணயாமம்” செய்வதும், மாதத்தில் வருகிற பிரதோஷ வேளையில் “நாடிசுத்தி பிராணயாமம்” செய்வதும் சுவாசம் விரைவில் கட்டுப்படும் என்பது சித்தர்கள் சூட்சும முறை…..
பிராணயாமம் செய்யும் முன் காராம் பசும்பால் “சிறிது” சாப்பிட்டு செய்தால் சுவாச சித்தி உடனே பலிதமாகும் என்பது சித்தர் கூற்று….
யோகமார்க்கத்தில் பசுக்கள்:
சிவன் காளை மீது வருவதும், எமன் எருமை மீது வருவதும் மாடுகள் தான். மாடுகள் என்பது யோகத்தில் “சுவாசம்” என அழைக்கபடும். சுவாசத்தின்பால் மனதை செலுத்தி சுவாசத்தை வசபடுத்தினால் சிவனை காணலாம், நந்தி அருளால் சிவனை கண்டேன் என்பது இது தான். அப்படியென்றால் எருமை என்பது என்ன அதனே? அதாவது நந்தி என்பது பிராணன்(வெள்ளை), எருமை என்பது அபானன் (கருமை) உடலில் பிராணன் அதிகமானால் சிவனாரை காணலாம். அபானன் அதிகமானால் எமனாரை காணலாம் இதை யோகிகள் அறிவர்.
மாந்திரீகத்தில் பசுக்கள்:
நீங்கள் எந்த விதமான மை வேண்டுமானாலும் தயாரித்து கொள்ளுங்கள். அம் மையானது வேலை செய்ய அதில் சிறிது காரம் பசுவின் கோமியம் கலந்தால் தான் சரியாக வேலை செய்யும் என்பது சூட்சமம்.
பசு இருக்குமிடம் துர்தேவதைகள் வராது. பசு எப்போதும் பாசிடிவ் எனர்ஜியை கொடுக்கும்… பசுவின் நெய் ஊற்றபடாத எந்த ஒரு யாகமும் முழுமையடையாது என்பது சூட்சமம். தட்சண் யாகம் செய்யும்போது, சிவனின் வாகனமாக மாடு இருக்கிறது என்பதால், “ஆவின் நெய் ஊற்றாமல்” பூவின் நெய் ஊற்றியதால் யாகம் நாசமாக போனதும் ஒரு காரணம்.
மருத்துவத்தில் பசுக்கள்:
நாட்டு பசுமாட்டின் பால் தான் நன்மை அளிக்கும். கலப்பினமாடுகளின் பாலில் நஞ்சு என்று சொல்லபடும் மாட்டின் வியர்வைகள் மற்றும் சில…… கலந்து வரும். மேலும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தை தாங்கும் திமில்கள் நாட்டு மாடுகளிடம் தான் அதிகம் உள்ளது. உங்களுக்கு அதிகபடியான நோய்கள் வர வேண்டுமானால் கலபினமாடுகளின் பாலை அருந்தவும். ஜெர்சி மாடுகளின் பாலை அருந்தவும். பன்றியின் திசுவை எடுத்து பசுவுடன் கலந்ததால் அது பாலை அதிகம் உற்பத்தி செய்வதோடு நோயையும் உற்பத்தி செய்கிறது.
ஆன்மீகத்தில் பசு தெய்வமாக கருதப்படுகிறது:
மேற்கண்டவாறு நாட்டு மாடுகளின் பயன்கள் இன்னும் அதிகம். எல்லா விசயத்திற்கும் “காரம் பசு” என்று சொல்லபடும் நாட்டுமாடு தேவை. அதன் காம்பில் தான் கருப்புவடு தோன்றும் மற்ற காம்புகளில் செயற்கையாக உருவாகும். மேலும் அது நாட்டுகாளைகளிடம் தான் இனபெருக்கம் செய்யும். நாட்டுகாளையை ஒழித்தால் நாட்டு பசு ஒழியும். பின் வெளிநாட்டுகலப்பின பசு இறக்குமதி ஆகும் நோயும் இறக்குமதி ஆகும். சிலர் வாசனை திரவியங்கள் மூலம் மாட்டை ஏமாற்றி இனபெருக்கம் செய்கின்றனர். இதனால் மாட்டின் உயிர்சக்தியில் மாற்றம் ஏற்படும். அதன் குணங்கள் மாறும். அப்படி மாற்றிய எந்த ஒரு மாட்டின் பொருளும் நன்மை தராது பால், நெய், சாணம், கோமியம் உட்பட. ஏறுதழுவதல் என்பது தமிழர் வீரத்தின் அடையாளம். தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளம்.
பசுவுக்கு அகத்திக்கீரை:
பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். பசுவை பூஜித்தால் பிரம்மா, வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும். பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும். பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள். “மா” என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.
பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.
மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு, எமன், எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை (மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும், பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.