சரஸ்வதி ஆவாஹனம் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து வழிபடத் தொடங்கும் மூல நட்சத்திர தினம்!
நவராத்திரியின் கடைசி மூன்றுநாள்கள் தேவியை சரஸ்வதியாகப் பாவித்து வழிபடுவது வழக்கம். அப்படி சரஸ்வதியை வழிபட ஆவாஹனம் செய்ய வேண்டிய தினம் சாரதா நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. நவராத்திரி ஒன்பது நாள்களும், நாடுமுழுவதும் கோயில்களிலும் வீடுகளிலும் அன்னையின் ஒன்பதுவிதமான திருவடிவங்களை வணங்கி வழிபடுவது வழக்கம். முதல் மூன்று நாள்கள் அன்னையை துர்கை வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் லட்சுமி வடிவிலும் அடுத்த மூன்று நாள்கள் சரஸ்வதி வடிவிலும் தொழுவது மரபு. சரஸ்வதி தேவியை சகல ஜகன்மாதாவாகக் கருதி, கல்வி, செல்வம், வெற்றிகள் ஆகியவற்றை அள்ளித் தரும் தேவியாகப் பூஜை செய்யும் நாள்களே சரஸ்வதி பூஜையும் விஜயதசமியும்.
பெரும்பாலானவர்கள் சரஸ்வதி தேவியை சரஸ்வதி பூஜை அன்றுதான் வழிபடுகிறார்கள். அன்றுதான் நாம் படிக்கும் புத்தகங்கள், நோட்டுகள், அலுவல் தொடர்பான கணக்கு நோட்டுகள், பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதியை பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அப்படி சரஸ்வதியை வழிபட ஆவாஹனம் செய்ய உகந்த நாள் பற்றி சாஸ்திரங்களில் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து தொடங்கும் நாளையும் விஸர்ஜனம் எனப்படும் பூஜையை விடும் நாளையும் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
‘மூலத்தில் பிடித்து அவிட்டத்தில் விடு’ என்பது சாஸ்திர மொழி. அதாவது, நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர நாளில் சரஸ்வதி பூஜையைத் தொடங்க வேண்டும். பூஜையைத் தொடங்க முதலில் அன்னையை ஆவாஹனம் செய்ய வேண்டும். சரஸ்வதியை விக்ரகங்களில் படங்களில் ஆவாஹனம் செய்யலாம். நாம் சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை அடுக்கி அவற்றின்மேல் சரஸ்வதி படத்தையோ விக்ரகத்தையோ வைத்து வழிபடுகிறோம்.
முற்காலத்தில் வட மாநிலங்களில் மூல நட்சத்திரநாளில் களிமண்ணில் சரஸ்வதி விக்ரகங்களைச் செய்து வழிபடத் தொடங்குவர். அவிட்ட நட்சத்திர நாளில் அந்த விக்ரகத்தைக் கரைத்துவிடும் வழக்கம் இருந்தது. ஆனால், அந்த வழக்கம் தென் மாநிலங்களில் இல்லை. இன்றும் கொல்கத்தாவில் பிரமாண்ட துர்காதேவி சிலைகள் செய்யப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு சென்று கரைக்கும் வழக்கம் உள்ளது.
சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து நூல்களை வைத்துவிட்டால் நான்குநாள்கள் கழித்து அவிட்ட நட்சத்திரத்தன்றுதான் எடுக்க வேண்டும். தற்கால அவசரயுகத்தில் அது சாத்தியமில்லை என்பதால் சரஸ்வதி பூஜை அன்றுமட்டுமே அவ்வாறு செய்கிறோம். ஆனால், சரஸ்வதி படம் அல்லது விக்ரகத்தில் ஆவாஹனம் செய்து தினமும் பூஜை செய்துவரலாம். சரஸ்வதியை ஸ்தோத்திரம் செய்யும் சரஸ்வதி துதிகள், சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லிமாலை, சரஸ்வதி சஹஸ்ரநாமம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம்.
மூல நட்சத்திரம் உள்ள நாளில் நல்ல நேரம் பார்த்து சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்யலாம். சரஸ்வதி தேவியை தாழம்பூ, ரோஜா, தாமரை ஆகிய மலர்கள் கொண்டு துதிக்கலாம். பேரிச்சை, திராட்சை, நாவல் ஆகிய பழங்களையும் எலுமிச்சை சாதம், பால் சாதம், அக்கார வடிசல் ஆகிய நைவேத்தியங்களையும் சமர்ப்பிக்கலாம். அன்னை சரஸ்வதியை வணங்குவோர்க்குக் கல்வி, ஞானம் ஆகியன கிடைப்பதோடு செல்வச் செழிப்பும் காரிய வெற்றியும் வாய்க்கும் என்பது ஐதிகம்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட, சுவாமி வழிபாடு செய்ய நல்ல நேரம்
14 அக்டோபர் 2021 (புரட்டாசி 28) வியாழக் கிழமை
காலை 6 மணி முதல் 7 மணி வரை (குரு ஹோரை) – சரஸ்வதி பூஜை மட்டும்
காலை 9 மணி முதல் 12 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை, சந்திர ஹோரை) – ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
பகல் 1 மணி முதல் 2 மணி வரை (குரு ஹோரை) – சரஸ்வதி பூஜை
பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) – ஆயுத பூஜை மட்டும்
இரவு 9 மணி முதல் 11 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) – ஆயுத பூஜை மட்டும்
நவராத்திரி திருவிழாவை ஏன் இவ்வளவு சிறப்பாக கொண்டாட வேண்டும் தெரியுமா?
பூஜைக்கு தவிர்க்க வேண்டிய நேரம்
வியாழன் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம்
மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை இராகு காலம்
இந்த நேரங்களில் சுவாமி வழிபாடு செய்வதை தவிர்ப்பது சுபம் தரும்.
விஜய தசமி எப்போது?
மகிஷாசுரனை கொன்று மண்ணுலக, விண்ணுலகத்தினருக்கு விடுதலை வாங்கி தந்த அன்னையின் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி என்ற அற்புத நாள் கொண்டாடப்படுகிறது.
இது புரட்டாசி மாதம் 29ம் தேதி தசமி திதியில் (அக்டோபர் 15) விஜயதசமி கடைப்பிடிக்கப்படுகிறது.
விஜயதசமி (கொலு எடுக்க காலை 10.00 – 11.00 மணி)
விஜய தசமி தின வாழ்த்து செய்திகள்: வெற்றியை வரமாக வாரி வழங்கும் அம்பிகை கொண்டாடுவோம்.
விரத காலங்களில் பாட வேண்டிய அம்மன் பாடல்
தேவி மகாத்மியம்
அபிராமி அந்தாதி பாடல் வரிகள்
துர்கா அஷ்டகம்
இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)
சகலகலாவல்லி மாலை
சரஸ்வதி அந்தாதி
மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்