விநாயருக்கு பல்வேறு பூக்கள், இலைகளால் அர்ச்சனை செய்யலாம். ஆனால், துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. துளசி மாலையும் அணிவிக்க கூடாது.
ஏனென்றால், துளசி என்ற பெண், விநாயகரை மணக்க பல ஆண்டுகள் தவம் இருந்தாள். ஆனால், விநாயகர் அவளை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அதோடு திருமாலின் மனைவியாக இரு என்று சொன்னார்.
அதையும் துளசி கேட்காததால் துளசியை செடியாக கடவாய் என்று சாபமிட்டார். மேலும், உன் இலை என் பூஜைக்கு ஏற்றதல்ல என்றும் கூறினார்.
இதைக் கேட்ட துளசி, “அண்ணலே என்னை இப்படி சபீத்தீரே! ஒரு நாளேனும் என்னைத் தங்கள் திருமேனி தாங்கியிருக்க அருள் தருக”என வேண்டினாள்.
அவள் வேண்டுகோளை ஏற்று விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜையில் பிள்ளையாருக்கு துளசி மாலை அணிவிக்கின்றனர்.
ஓம் கணபதி சரணம்