தான் இருக்கும் வீட்டினருக்கு ஏதேனும் தீங்கு நேரப்போகிறதென்றால் சில நாட்களுக்கு முன்பாகவே நாட்டுப்பசு அழும். இயற்கையோடு கலந்து காஸ்மிக் இன்டேலிஜன்ஸ் மூலம் ஞானம் பெறும் யோகிகள் போல பசுக்களுக்கு அத்திறன் மிகவும் அதிகம். புத்திகெட்ட பிள்ளைகள், முரடர்கள் போன்றோரை நாட்டுப்பசுவிடம் விட்டுவிட்டால் அவர்களுக்கு புத்திதெளிவு ஏற்படும் (Cow Aura). இன்றும் கிராமங்களில் பிள்ளைகள் காதலில் சிக்கினால் மாட்டோடு புழங்கவிடுவது வழக்கம். ஒரு கோபுரம் செய்யும் வேலையை நாட்டுப்பசுவின் திமில் செய்யும் (சூரிய கேது நாடி கொண்டு). வீட்டில் பசு இருந்தால் ஒரு கோயிலே வீட்டில் இருப்பது போல. அதனால்தான் குடும்ப பசு என்று வம்ச பசுக்கள் பேணும் முறை நம் கலாச்சாரத்தில் இருந்தது. நிலத்தில் எங்கே நீரோட்டம் இருக்கிறது… தெய்வசக்தி எங்கே இருக்கிறது, கருவறை எங்கே அமைக்கப்பட வேண்டும் (இப்போதுள்ள ஏராளமான சுயம்பு மூர்த்திகள், நாட்டுப்பசுவால் அடையாளம் காட்டப்பட்டவையே)… என்பதை நாட்டுப்பசுவால் உணர முடியும். நாட்டுபசுவின் பெருமைகளில் இவை சிறுதுளியே. சொல்லி மாளாது.