தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார்.இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.எந்த ஒரு காரியமும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் ‘முதற்கடவுள்” ஆகிறார்.
சிலருக்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். சிலருக்கு பதவி இழப்பு ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள், நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.விநாயகருக்கு விருப்பமான நைவேத்யம் மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, அதிரசம் முதலியன.
பன்னிரெண்டு விநாயகர் வக்ரதுண்டர், சிந்தாமணி, கணபதி, கஜானை கணபதி, விக்ன கணபதி, மதுரேச கணபதி, துண்டு கணபதி, வல்லப கணபதி, தூப கணபதி, கணேசர், மதோத்கட கணபதி, ஹேரம்ப கணபதி, விநாயகர்.மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர். கல்லால் அமைந்தவிநாயகரைவழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.
இந்து மக்களின் வழிபாட்டில், சிவன் கோயிலில் விநாயகரை வணங்கி, கோயிலின் உள்ளே செல்வது வழக்கம்.காரணம், விநாயகர் சிந்தனை கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட விநாயகருக்கு பல திருப்பெயர்கள் உண்டு.
விநாயகரை முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் ஆகியோர் தனிச் சன்னிதி கொண்டு அதற்கு ஏற்ப பலன்களை வாரி வழங்கி வருகின்றனர்.
ஸ்ரீ செவ்வந்தி விநாயகர் மிகவும் தொன்மை வாய்ந்த அனுக்கிரக மூர்த்தி. செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர் மாலை இவருக்கு அணிவித்து வழிபட்டால் கணவன்மார்களுடைய கடுமையான நோய்கள் விலகும். சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் செவ்வந்தி விநாயகர்.