கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ள பாசார் கிராமத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மிகவும் பழமையான பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் பாலாலயம் செய்யப்பட்டு கோவிலின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெற்றது.
இதில் ரிஷிவந்தியம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிவ பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.