நீங்கள் இங்கே பார்ப்பது திரிம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம்
இந்த ஜோதிர்லிங்கம், லிங்க அமைப்பில் கொஞ்சம் வித்தியாசமான, அதிலும் சூட்சம ரூபம் கொண்ட சிவலிங்கம், இது அமைந்துள்ள இடம் நாசிக் நகரத்தில், மகாராஷ்டிரா மாநிலம். இதில் என்ன வித்தியாசமான அமைப்பு என்றால் .
சிவலிங்கத்தின் மையம் ஒரு குழியாக இருக்கும், அதன் பக்கவாட்டில் மூன்று இதழ்கள் போல ஓர் அமைப்பு இருக்கும், அந்த நடு மையத்தில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும்.
அதவாது, அந்த மூன்று இதழ்களும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று மும்மூர்த்தியை குறிப்பதாகவும், அதே சமயத்தில் அந்த மூன்று இதழ்களை ஒன்று சேர இயக்கும் ஆற்றலாக சூட்சும ரூபமாக சிவலிங்கம் அமையப்பெற்று இருக்கிறது.
மேலும் படைத்தல் காத்தல் அழித்தல் போன்ற முத்தொழிலையும், பாதாளமாகவும் அந்த குழி, மேல் அம்மூன்றையும் பிணைத்த சூட்சுமாக ஆகாயமாகவும், வியாபித்து இருக்கும் பரம்பொருளாகிய சிவத்துள் இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை குறிக்கும் விதத்தில் அமையப்பெற்றது.
திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் (Trimbakeshwar Shiva Temple) திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான சிவன் கோயில். இது மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது.
பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக் கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய அழகான கோவிலாகும்.
இக்கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 2500 உயர மலைமீது கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடனும், அதில் நான்கு வாயில்களைக் கொண்டும் உள்ளது. இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்றாம் பேஷ்வாவான நானாசாகிப் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் கருவறையின்மேலே வழைப்பூ வடிவில் கூம்பான விமானம் அமைந்துள்ளது. அதன் உச்சியில் தங்கக் கலசமும், சிவனின் சூலமும் அமைந்துள்ளது. கோயிலின் முதன்மைத் தெயுவமான திரிம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில் உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையர் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு நாட்களில் ஐந்து முக தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. சிவ பெருமானின் கிரீடம் ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 4-5 மணி முதல் காட்டப்படுகிறது.
மற்ற அனைத்து ஜோதிர்லிங்கங்களும் சிவனை பிரதான தெய்வமாகக் கொண்டுள்ளன. முழு கருங்கல் கோயிலும் அதன் அழகிய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு பெயர் பெற்றது மற்றும் பிரம்மகிரி என்ற மலையின் அடிவாரத்தில் உள்ளது. கோதாவரியின் மூன்று மூலங்கள் பிரம்மகிரி மலையிலிருந்து தோன்றின.