ஊரடங்கால், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 165 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொரொனா தடுப்பு நடவடிக்கை ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் பூஜைகள் வழக்கப்போல் நடந்தது.
இந்தநிலையில் செப்டம்பர் மாதம் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கியது தமிழக அரசு. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களும் திறக்க உத்தரவிட்டு சில கட்டுபாடுகளையும் விதிக்கப்பட்டது. அதன்படி சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பட்டார்கள் அதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது.
தினமும் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனம் மற்றும் ரூ.100 கட்டணத் தரிசனத்தில் டோக்கன் முறை காலை 5.30 முதல் இரவு 7.30 வரை அனுமதி. அர்ச்சனை, அபிஷேகம் செய்தல், பூஜை பொருட்கள் கொண்டுவர அனுமதி இல்லை. கடற்கரையில், நாழிகிணறு, முடிக்காணிக்கை செலுத்துதல், காதுகுத்துதல் போன்ற வேண்டுதலுக்கு அனுமதியில்லை. தங்கும் விடுதியில் அனுமதி இல்லை.
கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் வடக்கு டோல்கேட் அருகில் உள்ள கலையரங்கம் மற்றும் முடிக்காணிக்கை செலுத்தும் இடத்தில் வைத்து இலவசத சரிதனத்திற்கு டோக்கன் வழங்கப்படும், 100 ரூபாய் கடட்டண தரிசனத்திற்கு கட்டண சீட்டு வழங்கப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் 25 நபர் வீதம் அனுமதிக்கப்படுவார்கள்.
கர்ப்பிணிபெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 5.30 மணிக்கு பக்தர்கள் கோவிலில் உள்ள இரண்டு டோல்கேட் வழியாக உள்ளே பக்தர் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு 50 பேர் வீதம் உள்ளே அனுப்பபட்டு இலவச தரிசனத்திற்கு டோக்கன், 100 ரூபாய் தரிசனத்திற்கு கட்டணசீட்டு வழங்கி குறிப்பிட்ட கால இடைவெளியில் தரிசனதிற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனத்திற்கு செல்பவர்கள் கோவிலுக்கு உள்ளே 6 அடி சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்படுகிறார்கள். கடல் மற்றும் நாழிக்கிணறு பகுதியில் புனித நிராட அனுமதி இல்லை. இ – பாஸில் தளர்வுகள் வழங்கப்பட்டதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
165 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் ஆர்வத்துடன் தரிசனம் செய்தனர்.