கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான வீரட்டானேஸ்வரர் ஆலயம் இரண்டாம் வீரட்டானம் என்று போற்றப்படுகின்றது.
சனி பிரத்தோஷத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரர் பெருமாளுக்கு பால்,தயிர்,இளநீர், தேன்,பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அர்ச்சனை மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் சுற்றியுள்ள அரகண்டநல்லூர், மணம்பூண்டி ,தபோவனம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.