கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற உலகளந்த பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா:- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், நடுநாட்டு திருப்பதி என்றும் அழைக்கப்படும் புகழ் பெற்ற உலகளந்த பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் உலகளந்த பெருமாள் சுவாமி, சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை திருக்கோவிலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்