கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள விரட்டானேசுவரர் கோவிலில், இன்று காலை முதல் மாட்டு பொங்கல் மற்றும் உழவர் திருநாளை முன்னிட்டு.
கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய் கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, விவசாயமும் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்வை வளம்பெறவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, மணம்பூண்டி, அரகண்டநல்லூர் மற்றும் அதன் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நந்தி பகவானை வழிபட்டு சென்றனர்.