சித்தர்_கோவில், கஞ்சமலை, சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று கஞ்சமலை சித்தேசுவர சாமி திருக்கோவில்.
இக்கோவிலில் அருள்பாலித்து வரும் மூலவர் சித்தேசுவரர் என அழைக்கபடுகிறார், ஒரு இளம் யோகியின் உருவம். சின் முத்திரையுடன் வீராசனத்தில் (தவக்கோலத்தில்) மிகக் கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.
“இளம்பிள்ளை” என பெயர் வரக் காரணம்” அந்த அந்தனர் பெயர் “மூலன்” தனது தேகத்தை காயசித்தி
(உடலை இளமையாக்குதல்) செய்து கொள்ளும்பொருட்டு “நரை திரை” கொண்ட வயதான சீடருடன் கருங்காடு என சொல்லபடும் கஞ்சமலை வந்தடைந்தார். மூலிகையை தேடிக் குரு செல்ல தன் சீடரிடம் சமைத்து வைக்க சொல்லி அவர் கிளம்பினார் குருவின் ஆணைப்படி சீடன்
சமையல் செய்யத் தொடங்கினார். சிறிது நேரத்தில் சோறு கொதித்துப்பொங்கியது. சோற்றை கிளற சட்டுவம் (கரண்டி) இல்லாத காரணத்தால் அருகே இருந்த ஒரு குச்சியை கொண்டு சோற்றை கிளற ஆரம்பித்தார் சோற்றை கிளற கிளற, சோறு நிறம் மாறி கருமை
நிறத்தை அடைந்தது, சீடர் அஞ்சி நடுங்கினார்.
“என் ஈசனே என் செய்வேன், பசியோடு வரும் குருவிற்கு என்ன சொல்வேன், எது நடந்தாலும் சரியென , வடித்த சோற்றை வீணாக்காது அவரே உண்டு முடித்தார். பின் குருவிற்கு வேறு பாத்திரத்தில் சோறு சமைத்து வைத்தார். நேரம் கடந்தது மூலிகை தேடிச் சென்ற குரு, சீடர் இருந்த இடத்திற்கு திரும்பினார்.
அவர் சீடனிடம் கேட்டார். யப்பா நீயார்?
இங்கிருந்த என் சீடன் எங்கே?
சீடன் திடுக்கிட்டார். என்னாயிற்று? குருவுக்கு
ஐயனே”,… நான் தான் உங்கள் சீடன் என்னை தெரியவில்லையா?
நீயா? என் சீடன்,….!!?
நீ எப்படி இந்த இளமையை பெற்றாய் ?..!!
என்ன இளமையா?
சீடரின் முகம் கேள்விக் குறியால் நிரம்பியது?
அப்பொழுது தான் அவர் தன்னை அவசர அவசரமாக நோக்கினார், கை கால்களில், முதுர்ச்சியின், சுருக்கங்கள் மறைந்து போயிருந்தன
வெண்ணிர ரோமங்கள் கறுப்பு நிறமடைந்ததையும் உடலில் ஒரு மாற்றத்தையும் உணர்ந்தார்,..
உடனே அருகில் இருந்த நீர் நிலைக்கு ஒடி தன் முகத்தை காண தனது இளமைகாலத்தின் பிம்பத்தை கண்டு ஆச்சரியத்தில் ஆழந்தார்,
என்ன நடந்தது?… குரு வினவ, குருவின் திருவடிகளில் சீடர் விழுந்து வணங்கி, நடந்தது அத்தனையும் எடுத்துரைத்தார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த குரு…. எந்த மூலிகையைத் தேடி அலைந்தோமோ அது இங்கு இருக்கின்றதை அறியாமல் போனோமே
சரி எங்கே அந்த குச்சி?
என வினவ, தங்களுக்கு அஞ்சிய நான் அதன் மகிமை தெரியாமல் அதனை அடுப்பில் போட்டுவிட்டேன் என்றார். சீடர்
இறைவா….கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே, இனி என்ன செய்வது? என்று எண்ணி வேறு வழியின்றி முன்பு செய்த பாத்திரத்தில்
இருந்த ஒன்றிரண்டு சோற்று பருக்கைகளை தானும் உண்டு நீண்ட இளமையை பெற்றார் என்றும் சீடர் உண்ட உணவை கக்க வைத்து அதை உண்டு இளமை பெற்றார் என்பதும் சொல்வதுண்டு,….
இவ்வாறு இருவருக்கு இளமையை தந்த ஊர் என்பதால் அவ்வூருக்கு “இளம்பிள்ளை” என பெயர்,…..
இத்திருத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சித்தேசுவரர் திருமூலரின் சீடரான “கஞ்சமலை சித்தர்” என்றழைக்கப்படும் காலங்கி நாதர் என்பது தெளிவாகிறது.
இரவு நேரங்களில் இந்த மலையில் சித்தர்கள் பலரும் தோன்றி மறைவது வாடிக்கை. தான் விரும்பியவர்களுக்கு சித்தர்கள் காட்சி தருவார்கள் என்பதும் நம்பிக்கை ……
இக்கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சித்தேசுவரரை வழிபட்டு செல்கின்றனர். இதனால் இக்கோவில்பொது மக்களால் அமாவசைக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் இறைவனை மனதில் நினைத்து தங்கள் இன்னல்கள் தீர வழிபடுகின்றனர், அவர்கள் விரும்பியவாறு, வேண்டியவாறு பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன, காரியங்கள் கைகூடுகின்றன என்பதை பக்தர்கள் கண்கூடாக பார்க்கின்றனர்…….