- சிவசின்னங்களாக போற்றப்படுபவை – திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
- சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் – ஐப்பசி பவுர்ணமி
- சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் – தட்சிணாமூர்த்தி
- ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?- திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)
- காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் – திருக்கடையூர்
- ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் – பட்டீஸ்வரம்
- ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர் – திருமூலர்
- முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் – திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
- ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது – துலாஸ்நானம்
- ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது – கடைமுகஸ்நானம்
- சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன் – கோச்செங்கட்சோழன்.
- கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் – நடராஜர்(கூத்து என்றால் நடனம்)
- தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம் – சிதம்பரம்
- வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம் – காசி
- சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம் – திருவண்ணாமலை
- அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம் – மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
- மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம் – மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
- தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்- சின்முத்திரை
- கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர் – சுந்தரர்
- வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம் – ஸ்ரீசைலம்(ஆந்திரா)
- சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம் – ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்
- இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம் – திருவண்ணாமலை
- கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்- திருமங்கையாழ்வார்
- திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம் – பரணிதீபம் (அணையா தீபம்)
- அருணாசலம் என்பதன் பொருள் – அருணம்+ அசலம்- சிவந்த மலை
- ஆறாதாரங்களில் திருவண்ணாமலை – ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்
- திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர் – பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
- “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு – 1997, டிசம்பர் 12
- அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் – திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
- கார்த்திகை நட்சத்திரம் -தெய்வங்களுக்கு உரியது – சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
- குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம் – 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
- சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர் – அனுமன்
- நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? -திருவாசகம்
- தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? – அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)
- மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் – அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)
- சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? – 108
- சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் – காரைக்காலம்மையார்
38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர் – அப்பர்(திருநாவுக்கரசர்) - நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்- ஆணவம், முயலகன்
- பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் – குற்றாலம்
- நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் – சங்கார தாண்டவம்
- இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்? – வெள்ளியம்பலம்(மதுரை)
- மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் – பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
- நடராஜருக்குரிய விரத நாட்கள் – திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
- நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் – களி.
46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் – தாயுமானசுவாமி - பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம் – காளஹஸ்தி
- வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர் – பிருங்கி
- திருமூலர் எழுதிய திருமந்திரம் – திருமுறையாகும் பத்தாம் திருமுறை
- திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம் – திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது
? ஓம் நமசிவாய ?
? திருச்சிற்றம்பலம் ?