ஒரு முறை சிவ பக்தர் ஒருவர் தனது கிராமத்திலிருந்து கேதார்நாத் சிவனை தரிசிக்க புறப்பட்டார். அங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை, அவர் நடை பயணமாக . கேதார்நாத் வழியை கேட்டபடி மனதில் சிவனை இருத்தியபடி சென்றார். (இந்த கதையை விடியோவாக கேட்க https://youtu.be/uLDMdYPDW7k)
நடைபயணம் துவங்கி பல மாதங்கள் கடந்துவிட்டன. இறுதியாக ஒரு நாள் அவர் கேதார்நாத்தை அடைந்தார். கேதார்நாத் கோவில் கதவுகள் 6 மாதங்கள் திறந்திருக்கும் 6 மாதங்கள் மூடப்பட்டிருக்கும். அவர் அங்கு சென்று சேரும் முன் கோவிலின் கதவுகள் மூடப்பட்டன. அவர் பண்டிட் அவர்களிடம், நான் தொலைவிலிருந்து மாதக்கணக்கில் நடந்து வந்துள்ளேன் தங்களிடம் பிரார்த்திக்கிறேன் தயவு செய்து கோவில் கதவுகளைத் திறந்து கடவுளை தரிசிக்க அனுமதியுங்கள் என கெஞ்சுகிறார். ஆனால் பண்டிட், கோவிலுக்கென்று ஒரு விதி உள்ளது, ஒரு முறை மூடப்பட்டால், மூடப்பட்டது தான். மீண்டும் திறக்க இயலாது என்றார். பக்தன் நிறைய அழுதான். மீண்டும் மீண்டும் சிவபெருமான் இறைவனை மனதினுள்ளே வேண்டினார். எல்லோரையும் பிரார்த்தித்தார், ஆனால், யாரும் கேட்கவில்லை. பக்தரே தாங்கள் இப்போது சென்று மீண்டும் 6 மாதம் கழித்து வாருங்கள், 6 மாதம் கழித்து, இங்கு கதவு திறக்கப்படும் என்றார் பண்டிட்.
6 மாதங்கள் பனிக்கட்டி மற்றும் குளிர் தான் அங்கிருக்கும். மனிதர்கள் அங்கே வசிப்பது கடினம். அதனால், மக்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர். அந்த பக்தர் மிகவும் வருத்தப்பட்டு அங்கிருந்து செல்ல மனமின்றி அழுதார். இரவு வரத்தொடங்கியது. ஆனால், அவர் சிவனை தியானம் செய்வதை நிறுத்தவில்லை. நிச்சயம் அருள் புரிவார் என்று நம்பினார். மிகவும் பசியையும் தாகத்தையும் உணர்ந்தார். அப்போது யாரோ வரும் சத்தம் அவருக்கு கேட்டது. ஒரு சன்யாசி அவரிடம் வருவதை பார்த்தார். அந்த சன்யாசி அவரிடம் வந்து அமர்ந்தார். எங்கிருந்து வந்தாய் மகனே..? என பக்தரிடம் கேட்டார். எல்லா நிலைகளையும் விளக்கிய பக்தர், என் வருகை இங்கே வீணாகிவிட்டது என அழுது புலம்பினார்.!
சன்யாசி, அவருக்கு ஆறுதல் கூறி உணவும் கொடுத்தார். பிறகு அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார். காலை கோவில் திறக்கும்னு நினைக்கிறேன் மகனே என்று, சன்யாசி பக்தரிடம் கருணையாக, நீ கண்டிப்பாக சிவனை தரிசிக்கலாம் என்றார். தன்னை மறந்து தூக்கம் வந்ததே தெரியாமல் அயர்ந்து தூங்கினார் அந்த பக்தர். திடீரென பேச்சுக்குரலாலும் சூரிய ஒளியாலும் பக்தனின் கண்கள் திறந்தன. கண் விழித்ததும் அவர் சன்யாசியை தேடினார், ஆனால், அவர் எங்கும் இல்லை. பண்டிட் கோவிலை திறக்க வருவதை பக்தர் கண்டார். பண்டிதரை வணங்கிய அவர்: ஐயா நேற்று 6 மாதம் கழித்து தான் கோவில் திறக்கும் இடைப்பட்ட காலத்தில் யாரும் இங்கு வரப்போவதில்லை என்று சொன்னீர்களே..? ஆனால், நீங்கள் காலையில் வந்து விட்டீர்களே என்றார் பக்தர்.
பண்டிட் அவரைகவனித்துப் பார்த்தார், அடையாளம் கண்டுகொள்ள முயற்சித்தார். அடையாளம் தெரியவில்லை. நீங்கள் நேற்று கோவிலுக்கு வந்தீர்களா..? என்னை சந்தித்தீர்களா.? என கேட்டார். நாங்கள் 6 மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் வருகிறோம்..! என்ன ஆச்சரியம் என்றார்.!
அதற்கு, இல்லை நான் எங்கும் போகவில்லை. நேற்று நான் உங்களை சந்தித்தேன், இரவில் நான் இங்கேயே தூங்கிவிட்டேன். நான் எங்கும் போகவில்லை என்றார் பக்தர். பண்டிட் ஆச்சரியத்திதிகைப்பில் ஆழ்ந்தார். ஆனால், நான் கோவிலை பூட்டிவிட்டு 6 மாதம் கழித்து இன்று தானே வந்தேன். ஆறு மாதங்கள் நீங்கள் எப்படி இங்கு வாழ முடியும்..?
பண்டிட் மற்றும் மற்ற அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இப்படி ஒரு குளிர்காலத்தில் தனி ஒருவன் எப்படி ஆறு மாதம் வாழ முடியும்.? அப்போது அந்த பக்தர் சன்யாசி மற்றும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு, பேசிய அனைத்தையும் பண்டிட் மற்றும் குழுவினரிடம் கூறினார். நடந்த அனைத்தையும் அவர்கள் மகாதேவரின் லீலைகள் என புரிந்து கொண்டனர்.!
பண்டிட் மற்றும் அனைவரும் அவரை வாங்கினார்கள். கடவுளே நேரில் வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார். நீங்கள் தான் உண்மையான பக்தன். சிவனை நேரில் தரிசனம் செய்தது நீங்களே. அவர் உங்கள் 6 மாதங்களை தனது சக்தி மூலம் இரவாக மாற்றியிருக்கிறார். அது தான் மாயா. காலத்தை சுருக்கிவிட்டார். இது எல்லாம் உங்கள் தூய்மையான மனதின் காரணமாகவும், உங்கள் நம்பிக்கை காரணமாகவும். உங்கள் பக்தியை வணங்குகிறோம் என்று பக்தரை வணங்கினர்.