எப்போது ஆலயம் சென்றாலும் ஒரு குற்றவாளி போல் அவள் முன் கூனி குருகி நில்லுங்கள்.
ஏனெனில் உங்களின் அத்தனை நடவடிக்கையும் உங்கள் மனசாட்சி மட்டுமே அறியும். மனசாட்சியின் ரகசியங்களை வாராஹி மட்டுமே அறிய முடியும்.
எதற்கு வந்தோம் என்பதை அவளறிவாள். நம்வேண்டுதல் ஆலயம் நுழையும் முன்னரே அவளுக்கு தெரிந்து விடும். நம் நடவடிக்கைகள் கண்டே தீர்வுகள் அவளிடம் கிடைக்கும்.
சிலநேரம் ஆலயத்திற்க்குள் நுழைய கூட நம்மால் இயலாது அது ஏன் தெரியுமா??
நமக்கு அவளிடமிருந்து அழைப்பு இல்லையென்பதே. எத்தனை பணம் இருந்தாலும் அவளிடம் எளிமையை கொண்டாடடுங்கள். அதிகாரம் பதவி பணம் மூலம் அவளை எளிதில் தரிசிக்க நினைத்தால் நிச்சயம் அவளின் அனுகிரகம் கிடைக்காது.
உரிமையோடும் உள்ளன்போடும் எளிமையோடும் உண்மையோடும் பக்தியோடும் கருணையோடும்
வாராஹியை இலகுவாக நெருங்க முடியும் முயற்சி செய்து பாருங்கள்.