- நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
(நமச்சிவாய என்னும் மந்திர சொரூபமாய் இருப்பவரைப் போற்றுகிறேன். ஜகத்தில் அனைத்துமாய் அதில் ஊடுருவியிருந்த அதை ஆளுகிற விஸ்வநாதரைப் போற்றுகிறேன்.) - இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க
(ஒரு க்ஷணமும் என் மனத்தினின்று பிரியாதவறது திருவடி வாழ்க) - கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க
(திருப்பெருந்துறையில் எழுந்தருளி அடியேனை ஆட்கொண்ட தேசிகத்திகத்தின் திருவடிகள் வாழ்க.) - ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
(அஹமத் பொருளாகி நின்று தித்திப்பவன் திருவடி வாழ்க) - ஏகன் அனேகன் இறைவன் ஆதி வாழ்க
(ஒன்றாயிருப்பவன் பலப் பலவாயிருப்பவனுமாகிய இறைவனது திருவடி வாழ்க)
வாதவூரர் வரலாறு
மாணிக்கவாசகர் மதுரைக்கு பக்கத்தில் உள்ள திருவாதவூரில் பிறந்தார். அதனால் தான் அவருக்கு வாதவூரர் என்று பெயர் வந்தது.அவருடைய கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் ஆகிய சிறப்புக்கலைகளைப் பற்றி அறிந்த பாண்டிய மன்னன் அவரை தன்னிடம் வரவழைத்து தனது சபையில் மந்தியாக நியமித்தார்.மேலும், அவருடைய ஆட்சித் திறமையைக் கண்ட மன்னர், அவருக்கு ‘தென்னவன் பிராமராயன்’ என்ற பட்டத்தையும் வழங்கினார். வாதவூரர், தன் பணியில் சிறந்து விளங்கினாலும், அவர் மனம் சிவ பக்தியில் திளைத்திருந்தது. அதன் காரணமாக அவர் மனம் உலக வாழ்க்கையை விட்டு விலக ஆரம்பித்தது.
சோழ நாட்டு கடற்கரையில் நல்ல அராபிக்குதிரைகள் விற்பனைக்காக வந்திருப்பதை அறிந்த பாண்டியன், அவைகளை வாங்கி வரும்படி திருவாதவூரரை அனுப்பினார். அவர், போகும் வழியில் திருப்பெருந்துறையில் திட்டுவருளே வடிவாகியிருந்த ஞானாசிரியர் ஒருவரால் ஆட்கொள்ளப் பெற்றார். பரமசிவனை அத்திருக் கோலத்தில் தோன்றித்த திருவாதவூராரைத் தமக்குரியவர் ஆக்கிக்கொண்டார் என்பது ஐதீகம். குதிரை வாங்குவதற்கு தான் எடுத்துச் சென்ற செல்வத்தையெல்லாம் அவர் சிவ சேவையிலேயே செலவழித்துவிட்டார். அரசர் இட்ட பணியை மறந்துவிட்டு குருசேவையிலும் சிவசேவையிலும் ஆனந்த பரவசமடைந்திருந்தார்.
இப்படி நிகழ்ந்துக் கொண்டிருப்பவை எல்லாம் மன்னர் காதுகளுக்கு எட்டின, அவர் சீற்றம் கொண்டு திருவாதவூரரை கைப்பிடியாக சிறையெடுத்து வரும்படி ஆணை பிறப்பித்தார். அந்த நடவடிக்கை தம்மை வந்து அடையும் வரையில் அவர் உலக நடைமுறையையே மறந்திருந்தார். நெருக்கடி நேரில் வந்து தாக்கிய பொழுது தாம் செய்த பிழையை எண்ணிப் பரமாசார்யாரிடம் பரிந்து பணிந்து இனித் தாம் செய்வது யாது என்று விண்ணப்பித்தார். ஆவணி மாதம் மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று மன்னருக்கு செய்து அனுப்பச்சொல்ல.. வாதவூராரும் அவ்வாறே செய்தார். தொடரும்…
ஓம் நமசிவாய