முருகன் பிறப்பும் வளர்ப்பும்:
முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக ளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார்.
அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த் திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னை பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார். மேலும் முருகனு க்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணா வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழை க்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையி தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனு ம் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது பெயர் காரணம்.
முருகனின் பெயர்களுக்கான காரணங்கள்:
விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால்- விசாகன்.
அக்கினியில் தோன்றியதால்- அக்னி புத்திரன்
கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால்- கங்காதரன்.
சரவண பொய்கையில் மிதந்ததால்- சரவணபவன்.
கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால்- கார்த்திகேயன்.
அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால்- கந்தன்
ஆறுமுகம் கொண்டதால்- ஆறுமுகன் / சண்முகன்
இப்படி முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின் ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது
முருகன் பிறப்பு மகிமை:
பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். ஒருமுறை தட்சன் சிவபெருமானை யாகத்தி ற்கு அழைக்காமல் அவமானப் படுத்தினார். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி அக்னியில் விழுந்து உயிர் துறந்தார். பிறகு சிவபெருமான் தம் அவதாரமான வீரபத்ரனை அனுப்பி யாகசாலையையும் தட்சனையும் அழித்தார். பிறகு சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட ஆரம்பித்தார்.
தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர்,
இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் கார்த்திகை திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.
ஞானப்பழம்:
ஒருநாள் நாரதர், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார்.
முருகன் தம் மயில் வாகனம் கொண்டு உலகை சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் தாய் தந்தையரே உலகம் என்று கருதி அவர்களை மும்முறைை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது. மகிழ்ந்த முருகன் தமிழகத்திலேயே தங்கிவிட்டார் இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்ததன.
பன்னிருகரங்களின் பணிகள்:
முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன.
மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகிறது.
மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது.
ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன.
ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது.
எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது.
ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது.
பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.
தெய்வானையுடன் திருமணம்:
முருகனின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனைஅழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியை செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன் முருகப் பெருமான் – தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
முருகனின் அடியவர்கள்:
அகத்தியர்
நக்கீரர்
ஔவையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
பாம்பன் சுவாமிகள்
கிருபானந்தவாரியார்
அறுபடை வீடுகள்:
திருப்பரங்குன்றம் – சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
திருச்செந்தூர் – அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
பழநி – மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
சுவாமிமலை – தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
திருத்தணி – சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
பழமுதிர்சோலை – ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம்.