- வேகம் கெடுத்தாண்ட வேந்தன் ஆதி வெல்க
(மனோ வேகத்தை அகற்றி என்னை ஆட்கொண்ட இறைவனது திருவடிக்கு வெற்றியுண்டாகுக.) - பிறப்பறுக்கும் பிஞ்ஜகன் தன பெய்கழல்கள் வெல்க
(பிறப்பு இறப்பு ஆகிய சம்ஹார சக்கரத்தை அழிக்கின்றவனும் வீரக்கழல்களை அணிந்திருப்பவனும் ஆகிய சிவனாரது திருவடிகள் வெற்றி பெறுக.) - புறத்தர்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க.
(வணங்காது வேற்றாராய் இருப்பவர்களுக்கு வெகுதூரத்த்தில் இருப்பவன் போலுவுடைய திருவடிகளுக்கு வெற்றி வாய்ப்பதாகுக.) - கரம் குவிவர் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
(காய் கூப்பி வணங்குபவர்க்கு இன்பமளிக்கும் இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக.) - சிரம் குவிவர் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.
(தலை வந்ககுபவர்களை ஆன்மீகத்தில் உயரச்செய்பவனது நலம் தரும் தாள்களின் திட்டம் நிறைவேறுக.)
வாதவூரர் வரலாறு – பகுதி 2
ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேருமென்று வாதவூரர் நேரில் சொன்னதைக்கேட்டு பாண்டியன் தனது ஐயத்தை அகற்றினார். அனால், திருப்பெருந்துறையில் குதிரையொன்றும் காணப்படவில்லை எண்டு ஒற்றன் மூலமாக அறிந்து கொண்ட அரசன் கோவம் கொண்டு, வாதவூரரை கைது செய்தார். ஆனால், குறித்த நாளன்று குதிரைகள் வந்து சேர, அவரை விடுவித்தார். பின்பு, அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறி மறைந்தது. அரசருக்கு அளவில்லாத கோவம் வர மீண்டும் திருவாதவூரரை கைது செய்தார்.
(பக்தியில் ஆழ்ந்து ஈடுபடு கிற ஒருவருக்கு, உலக வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் அவரது பக்தியை கலைத்து விடுவதில்லை. உலகத்தவர்களை அவர் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் விளைவிக்கும் துன்பங்கள் பக்தனது பக்தியை அதிகரிக்கும். தீயிலிட்டு பொன் ஒளி வீசுவது போன்று இன்னல்கள் அதிகரிக்குமளவு பக்தியானதும் தீவிரமடைகிறது. இந்த உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதாககத் தான் திருவாதவூராருக்கு இந்த மாதிரியான இன்னல்களை கொடுத்து ஈசன் திருவிளையாடல் புரிகின்றார்.)
அரசங்கக் காரியத்துக்காக கொடுத்த திரவியத்தை வேறு காரியத்துக்கு பயன்படுத்தியது முதல் குற்றம். குதிரை கொண்டு வருவது போல ஜாலம் செய்து நரிகளை ஏவியது இரண்டாவது குற்றம். இவைகளை முன்னிட்டு பாண்டிய மன்னர். வாதவூரரை சிறையிலிட்டு பல துன்பங்களுக்கு ஆளாக்கினார். ஆனால், வாதவூராருடைய மனப்பான்மையே முற்றிலும் மாறியமைவதாயிற்று. தாம் செய்ததெல்லாம் சிவா சேவை. சிவா சேவைக்கென்றே மானுட பிறவி வாய்த்துள்ளது. தமக்குற்ற துன்பங்களெல்லாம் சிவன் செயல். ஆதலால் அவைகளை துன்பமாகவே தன கருத கூடாது. அதற்கேற்ப தீவிர பக்தி தம்மிடம் பெறுக வேண்டும். பின்பு அந்த பக்தியும் தெய்வத்திடம் இருந்தே வருகிறது. மாறாத பக்தியை தமக்கு எப்போததும் தந்தருள வேண்டுமென்று இறைவனிடம் எப்போதும் அழுத்த வண்ணம் வேண்டிக்கொண்டே இருந்தார் வாதவூரர்.
அவரது பக்தியானது பராபக்தியாக பரிணமித்து வந்தற்கிடையில் இறைவனது திருவருளால் இன்னுமொரு நிகழ்வு நேர்வதாயிற்று.
(தொடரும்…)
ஓம் நமசிவாய…