- ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
(சிவனுடைய திருவடிக்கு வணக்கம் ;எமது தந்தையின் திருவடைக்கு வணக்கம்.)
- தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
(ஞான பிரகாசமுடையவனது பாதங்களுக்கு நமஸ்காரம்; செந்தாமரைப் போன்று சிவந்த பாதங்களுடைய சிவனுக்கு நமஸ்காரம்.)
- நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
(அன்பில் ஊறியுள்ள தூயவனது திருவடிக்கு வணக்கம்.)
- மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
(மாயையின் விளைவு ஆகிய பிறப்பு இறப்பு என்னும் மாறுபாட்டை அழிக்கின்ற இறைவனது திருவடிக்கு வணக்கம்.)
- சிர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
(மேன்மை பொருந்திய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் நம் கடவுளின் திருவடிக்கு வணக்கம்.)
வாதவூரர் வரலாறு – பகுதி 3
வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து கரையோரம் இருக்கும் வீடுகளை எல்லாம் அரித்துக் கொண்டு போகும் அறிகுறிகள் தென்பட்டன. பாண்டிய மன்னன் அதை நேரில் பார்த்துவிட்டு உத்தரவு ஒன்று பிறப்புத்தான். அதன்படி வீட்டுக்கு ஓர் ஆள் கூடையுடனும் மண்வெட்டியுடனும் வேலைக்கு வந்து அணை கட்ட வேண்டியதாயிற்று. சிவ பக்தி மிகப் பூண்டிருந்த வந்தி என்னும் பிட்டு வாணிச்சி ஒருத்திக்கு ஆள் கிடைக்காமல் போகவே அவள் இறைவன் சொக்கநாதரிடம் தம் குறையை முறையிட்டால். பின்பு கூலி ஆளும் ஒருவன் தோன்றி வந்து முன் கூலியாக பிட்டு ஏற்று உண்டு விட்டு வேலைக்குப் போனான்.
அப்படிப் போனவன் மண்ணை வெட்டி போடுதலில் தன் பகுதியை செய்து முடிக்காது விளையாடி வீண் பொழுது போக்கிக் கொண்டிருந்தான். அதை காணலுற்ற கண்காணிப்பாளன் அக்கூலியிளின் கூத்தாட்டத்தை பார்த்து பாண்டியனிடம் தெரிவித்தான். மன்னனும் பிறம்பால் அவன் முதுகில் ஓங்கி அடித்தான். அவ்வடியானது பிரபஞ்சம் எங்கும் உள்ள உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது! அடி கொடுத்த மதுரை வேந்தனும் தன் பிரம்பு அடியை தானே உண்டு வருந்தினான். கூலியாலோ மாயமாய் மறைந்து போய் விட்டான்!
மனிதன் தெய்வத்தோட வைக்கிற இணக்கம் எத்தகையதாயினும் அது நல்லதையே நல்குகிறது. பாண்டியனின் செயல் அதற்கு அறிகுறியாகும். அடி உண்ட அரசனுக்கு திடீரென்று நல்லறிவு பிறந்தது. தான் தெளிவடைந்ததை குறித்து அவன் திருவாதவூரரிடம் போய் கூறுவானாயினன் : “என் சொத்து என்று நான் எதைக் கருதினேனோ அது உண்மையில் சிவன் சொத்து. தாம் அதை சிவ சேவையில் செலவழிப்பது முறையே. ஈசன் எல்லாம் வல்லவன். அவன் நரியை பாரியாக்குவான்; பாரியை நரியாக்குவான். குதிரையின் மீது மிகை பட்டா பற்றுதல் வைக்க வேண்டாம் என்று அவன் எனக்கு பாடம் புகட்டியுள்ளான். தம் பொருட்டு சிவன் குதிரைச் சேவகனாய் வந்த எனக்கு காட்சி கொடுத்தான். தம் பொருட்டும், பிட்டு வாணிச்சியின் பொருட்டும் அவன் கூலி ஆலாய் வந்து மண் சுமந்து இந்த பாபியேனிடம் பிரம்பால் அடியுண்டான்.
அவன் பக்தபஸ்தலன் அடியாருக்கு எளியவன். உமது நல்லினக்கத்தால் நான் இப்பொழுது சிவ பக்தன் ஆனேன். நான் தமக்கு செய்ய கிடப்பது யாதோ?”. இப்படி அரசன் விண்ணப்பிப்பதை கேட்ட திருவாதவூரர் தாம் துறவறம் பூண்டு வெளியேக விரும்பியதாக தெரிவித்தார். அரசனும் அன்போடு அதற்காக ஆதரவு கொடுத்து அவரை சிவனடியாராகும்படி அனுப்பி வைத்தான்.
துறவறம் பூண்டு சிவநெயிலேயே தீவிரமாக செல்லுவதற்கான வாய்ப்பை வழங்கிய திருவருள் விலாசத்தை திருவாதவூரர் பெரிதும் வியந்தார். இனம் பிரிந்த மான் தன் இனத்தைத் தேடி ஓடுவது போன்று அவர் திருப்பெருந்துறையை சென்றடைந்தார்.
அங்கு குறுந்த மரத்தடியில் குருநாதரும் சிவனடியார் திருக்கூட்டமும் பழையபடி வீற்றிருந்தது அடிகளுக்கு அளவில்லாத ஆனந்தத்தை ஊட்டியது. ஆத்ம சாதகன் ஒருவனுக்கு வாய்க்கின்ற வாய்ப்புகளுள் தலை சிறந்தவை இரண்டு. தனது அருள் குறுவின் சந்நிதி சார்ந்து, அவரோடு சிறிது காலம் இணங்கி வாழ்ந்திருப்பது முதலாய்யது ; நல்லார் இணக்கம் அல்லது ஸத்ஸங்கம் அதற்கு அடுத்தபடியானது. பெறுவதற்கு அறிய அவ்விரண்டு அருள் பெயர்களும் வாதவூரருக்கு வேண்டியவாறு வாழ்ந்தன. அதனால் அவரது ஆத்மசாதன முயற்சியானது மாறாது முற்று ப்பெறுவதாயிற்று.