இனிமேல் திருப்பதிக்கு போகாமலே லட்டு வாங்கலாம்! எங்கே கிடைக்கும் என்ற தகவல்கள்.
திருப்பதி என்றால் முதலில் நினைவுக்கு வருவது லட்டுதான். அந்த லட்டை வாங்க பலர் வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கிறார்கள். தினந்தோறும் 3 முதல் 5 லட்சம் வரை லட்டுகள் தயாரிக்கப் படுகின்றன.
லட்டு பிரசாதம் , திருப்பதியில் மட்டும்தான் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா, மாதத்தில் ஒரு நாள் மட்டுமே கிடைக்கும். விசாகபட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா கோயிலில் இந்த லட்டு பிரசாதம் கிடைக்கிறது.
இந்த லட்டு பிரசாதம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவை பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு இங்கு கவுன்ட்டரில் விற்பனை செய்யப்படுகிறது. மாதத்தில் ஒரு நாள் இந்த விற்பனை செய்யப்படும். இந்த திருமலை திருப்பதி லட்டு விற்பனை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை கிடைக்கும். திருமலையில் இருந்து நேரடியாக இங்கு பக்தர்கள் வந்து வாங்கிச் செல்கிறார்கள். திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த லட்டுக்கள் இந்த கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு தேவஸ்தானத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு பக்தர்களுக்கும் இரு லட்டுகள் வழங்கப்படுகின்றன. எனினும் எந்த நிர்ணயமும் இல்லை. இருப்பிற்கேற்ப லட்டுகளை வாங்கிச் செல்லலாம். இந்த கோயிலில் 5 அல்லது 6 மணி நேரத்தில் லட்டு விற்பனை முடிந்துவிடுகிறது.
திருப்பதி லட்டுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் அது போல் லட்டை தயாரித்து வழங்குவதில்லை. கீழ் திருப்பதியில் போலி லட்டை விற்பனை செய்கிறார்கள். ஆனால் அதை பெரும்பாலானோர் வாங்குவதில்லை. கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கற்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது.
ஏழுமலையானுக்கு பிரசாதங்களை தயாரித்து பூஜை செய்ய வழங்கி வந்தவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். இவர்கள் தான் பூந்தியை லட்டாக்கி பிரசாதமாக்கியவர்கள் என்று சொல்லப்படுகிறது. ‘கல்யாணம் ஐயங்கார்’ என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன். பூதேரி கிராமத்திலிருந்து வந்து தன் உறவினர்களுடன் திருமலையில் தங்கி திருமலை வெங்கடேஷ பெருமாளுக்கு குடும்பத்துடன் கைங்கரியம் செய்யும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்.