தீபம் ஏற்றிய திரிகளை என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதை செய்தால் உங்க வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் ஓடிவிடும். பொதுவாக வீடுகளில் மாலை வேளைகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். விளக்கேற்றினால்தான் லட்சுமி கடாட்சம் என்பார்கள்.
நல்லெண்ணெய்யையோ அல்லது பசும் நெய்யையோ வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அது போல் பண்டிகை காலங்கள், நாள் கிழமைகளிலும் விளக்கேற்ற வேண்டும். எப்போதும் விளக்கு கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ ஏற்ற வேண்டும். இந்த திரி பஞ்சு திரியாக இருத்தல் நல்லது. தீபம் ஏற்றினால் அது திரி முழுவதும் எரிய கூடாது என்பார்கள். எனவே தீபம் ஏற்றியதும் சில மணி நேரம் எரியவிட்டுவிட்டு பிறகு குளிர வைக்க வேண்டும்.
அதாவது எரியும் போது விளக்கின் திரியை பின்னோக்கி இழுத்து எண்ணெயில் தோய்த்துவிட்டால் தீபம் குளிர்ந்துவிடும். ஏற்றிய திரியையே ஏற்றக் கூடாது. இதனால் தினமும் திரியை மாற்ற வேண்டும். அவ்வாறு தினமும் மாற்று திரியை என்ன செய்யலாம் என்பது குறித்து குவோராவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளக்கேற்றும் திரியை என்ன செய்ய வேண்டும்?
தினமும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும், அல்லது வாரம் ஒரு முறை மாற்றினாலும் உபயோகித்த திரிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து வைத்து வாருங்கள். கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாகப் பார்த்து உட்கார வையுங்கள்.
இதனை இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் தூங்கச் செல்லும் முன் செய்வது நல்லது. அந்த திரிகளைத் தூபக் காலில் போட்டுக் கொள்ளுங்கள்.பின்னர் அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி கழித்து விடுங்கள்.
திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனைக் கொளுத்தி விடுங்கள். திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அல்லது தண்ணீர் ஊற்றி சமையலறை சிங்கில் ஓட விட்டு விடுங்கள்.
திரிகள் முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும். உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நன்மை கிடைக்கும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.